பகலில் சாரல் மழையால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி
குமாரபாளையத்தில் பகலில் சாரல் மழையால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.;
பகலில் சாரல் மழையால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி
குமாரபாளையத்தில் பகலில் சாரல் மழையால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
குமாரபாளையத்தில் சாலையோர கடைகள் உள்ளிட்ட இதர கடைகள் வழக்கம்போல் செயல்பட்டுக்கொண்டிருந்தது. நேற்று பகல் முழுதும் சாரல் மழை பெய்தது. இதனால் சாலையோர கடை வியாபாரிகள் உள்ளிட்ட பலரும், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் அவதிக்கு ஆளாகினர். வாரச்சந்தை நாளான நேற்று, இடைப்பாடி சாலையில் கடை வைத்திருந்த வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மழையால் பொதுமக்கள் கூட்டமும் இல்லாமல் வியாபாரம் இல்லாத நிலை நீடித்தது.