குமாரபாளையத்தில் வாகனங்களை நிறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் வாகனங்களை நிறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-12-10 13:45 GMT

குமாரபாளையத்தில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் வாகனங்களை நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

குமாரபாளையத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் ஆனங்கூர் பிரிவு சாலை பகுதியில் 10 நிமிடம் வாகனங்கள் நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு தொழிற்சங்க தலைவர் பாலுசாமி தலைமை வகித்து பேசுகையில், ஒன்றிய அரசின் கலால் வரி விதிப்பு காரணமாக பெட்ரோல், டீசல் விலைகள் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. ஒன்றிய அரசு கலால் வரியை குறைத்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி நாடு முழுதும் 10 நிமிடம் வாகனங்கள் நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News