டூவீலரில் நிலை தடுமாறி விழுந்தத பல் டாக்டர் உதவியாளர் பலி

குமாரபாளையத்தில் டூவீலரில் நிலை தடுமாறி விழுந்ததில் பல் டாக்டர் உதவியாளர் பலியானார்;

Update: 2022-03-30 16:30 GMT

குமாரபாளையத்தில் டூவீலரில் நிலை தடுமாறி  விழுந்ததால் பல் டாக்டரின் உதவியாளர் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், குருவரெட்டியூர் அரசு மருத்துவமனையில் பல் டாக்டரின் உதவியராக பணியாற்றி வருபவர் வெங்கடாசலம்( 35.)  நேற்று வேலை முடிந்து வைகுந்தத்தில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக இரவு 08:30 மணியளவில் குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில், எதிர்மேடு பகுதியில் ஜே.கே.கே.நடராஜா கல்லூரி எதிரில் வந்த போது, இவர் வந்த ஹீரோ ஹோண்டா வாகனம் நிலைதடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்து குமாரபாளையம் எஸ்.ஐ. நந்தகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சடலம் குமாரபாளையம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இறந்த நபருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.

Tags:    

Similar News