குமாரபாளையத்தில் டூவீலர் மோதி முதியவர் பலி

குமாரபாளையத்தில் டூவீலர் மோதி முதியவர் பலியானார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.;

Update: 2022-01-04 12:30 GMT
பைல் படம்

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் வசிப்பவர் ராமசாமி,( 74.) விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு 07:30 மணியளவில் சேலம், கோவை புறவழிச்சாலை, பல்லக்காபாளையம் பிரிவு பகுதியில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சாலையை நடந்து கடந்தார்.

அப்போது குமாரபாளையம் பக்கமிருந்து வேகமாக வந்த டூவீலர் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்து, சேலம் ஜி.ஹெச்.இல் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இவர் நேற்று அதிகாலை 06:00 மணிக்கு இறந்தார். டூவீலரில் வந்தவர்கள் பற்றி குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்ததில், வண்டியை ஓட்டி வந்தவர் பவானியை சேர்ந்த இளங்கோவன்,( 25,) கட்டிட மேஸ்திரி, என்பதும், பின்னால் உட்கார்ந்து வந்தவர் சித்தாள் வேலை செய்யும் கவுரி, 35, என்பதும் தெரியவந்தது.

இந்த விபத்தில் இவர்களும் கீழே விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்து ஈரோடு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News