குமாரபாளையத்தில் மயான சுவர் கட்டுமான பணி துவக்கம்

குமாரபாளையத்தில் மயான சுவர் கட்டுமான பணி துவக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-10-30 00:45 GMT

குமாரபாளையத்தில் மயான சுவர் கட்டுமானப் பணி துவக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் கலைமகள் வீதியில் உள்ள நகராட்சி மயானத்தின் சுவர் பல வருடங்கள் ஆனதால் சேதமானது. எந்நேரமும் விழுந்து அதனால் அவ்வழியே செல்வோர் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்ற நிலை உருவானது. மயானத்தின் பாதுகாப்பை பலப்படுத்தவும், அப்பகுதி பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்றும் இதன் கட்டுமான பணி தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மயான தியான மண்டப பணிகள் தீவிரம்

குமாரபாளையம் மயான வளாகத்தில் 30 லட்சம் மதிப்பில் தியான மண்டபம் பணிகள் துவங்கி நடைபெற்றுவருகிறது.

இது குறித்து நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் கூறுகையில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 30 லட்சம் மதிப்பில், குமாரபாளையம் நகராட்சி மயான வளாகத்தில் தியான மண்டபம் கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இது அரசு சார்பில் 50 சதவீதமும், மயானத்தை பராமரித்து வரும் ரோட்டரி சங்கம் சார்பில் 50 சதவீத பங்களிப்புடனும் செயல்படுத்தப்படுகிறது. இதன் பணிகள் துரிதமாக நடைபெற்று விரைவில் தியான மண்டபம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனக் கூறினார்.

விபத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த கோழிகடை வாடிக்கையாளர்கள்

குமாரபாளையம் காலனி மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே கோழி இறைச்சி கடையில் பணியாற்றி வந்தவர் ஓசூரை சேர்ந்த ஸ்ரீகாந்த், 25. இவர் கடந்த 6 மாதம் முன்புதான் இந்த கடையில் பணியில் சேர்ந்துள்ளார். வட்டமலை தனியார் கல்லூரி எதிரில் சேலம் கோவை புறவழிச் சாலையை நடந்து கடந்துள்ளார். அப்போது சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த டூவீலர் மோதியதில், படுகாயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை செய்து வந்தனர். இவரது உடல் குமாரபாளையம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தது. இவரது உறவினர்கள் யாரும் வராததால், கோழிக்கடை வாடிக்கையளர்களான மாணிக்கம், சுரேஷ், குப்புராஜ், தேவராஜ், யுவராஜ், தேவா, கோழிக்கடையினர் பிரபு, பூமணி உள்ளிட்ட பலர் இவரது உடலை குமாரபாளையம் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.

மின் மயான புகை போக்கியின் உயரம் அதிகரிக்க கோரிக்கை

குமாரபாளையம் மின் மயானத்தில் உள்ள புகை போக்கி மிகவும் சேதமானது. இதனை மாற்ற நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி புதிய புகை போக்கி மற்றும் மின் மயான இயந்திரங்கள் பல மாற்றம் செய்யப்பட்டது. இதன் புகையால் அருகில் உள்ள வீடுகளில் மாடி மற்றும் ஓடுகள் பகுதியில் ஆயில் போன்ற திரவம் படிகிறது என புகார் எழுந்துள்ளது. புகையாலும், இந்த திரவ படிமத்த்தினாலும் சுகடஹ்ற சீர்கேடு ஏற்படுவதாக வேதாந்தபுரம், கலைமகள் வீதி, காளியம்மன் கோவில் வீதி, குள்ளங்காடு உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். மின் மயான புகை போக்கியின் உயரம் மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.

பவானி, பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின்மயனங்களில் பழுது ஏற்பட்டால் குமாரப்பாளயத்திற்கு சடலங்களை அனுப்பி வைக்கின்றனர். இதனால் இங்குள்ள பணியாளர்களுக்கு பணிசுமை கூடுகிறது. குமாரபாளையம் நகரில் சடலங்களை கொண்டுவரும் போது, சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் வழி நெடுக சடலத்தின் மீது போடப்பட்ட மாலைகளை சாலைகளில் போட்டவாறு வருகின்றனர்.

மேலும் பட்டாசுகளில் வெடித்தும் வருகின்றனர். இதனால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மயான பாதையில் உள்ள தெருக்களில் இந்த பூக்கள் கொட்டுவதால் நாள் ஒன்றுக்கு பல முறை வாசல் சுத்தம் செய்யும் நிலைக்கு ஆளாகின்றனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்து வருகின்றனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்துள்ளனர். சடலங்களை கொண்டு செல்லும் போது பூக்கள் போடக்கூடாது என உத்திரவிட கேட்டுக்கொண்டு உள்ளனர். பலமுறை இது குறித்து பொதுமக்களுக்கு அறிவித்தும் தொடர்ந்து மயான பாதையில் பூக்களை போடுவதும், பட்டாசுகளை வெடிப்பதுமாக உள்ளனர்.

Tags:    

Similar News