புகையிலை பொருட்கள் விற்ற மூவர் கைது

குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2025-05-20 13:25 GMT

புகையிலை பொருட்கள் விற்ற

மூவர் கைது

குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. பிரபாகரன் தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். கம்பன் நகர், கத்தேரி பிரிவு, பழைய பள்ளிபாளையம் சாலை ஆகிய பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பதாக அறிந்து, நேரில் சென்றனர். அங்கு புகையிலை பொருட்கள் விற்றுக்கொண்டிருந்த மாதேஸ்வரன், 45, முத்துக்குமார், 45, முருகன், 47 ஆகிய மூவரை போலீசார் கைது செய்து, 45 புகையிலை பொருள் பேக்கட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News