குமாரபாளையத்தில் மழைநீர் வடிகால் அமைக்க நமக்கு நாமே திட்டத்தில் நிதி உதவி
குமாரபாளையம் நகராட்சியில் மழைநீர் வடிகால் அமைக்க நமக்கு நாமே திட்டத்தில் தனியார் நிதி உதவி வழங்கினார்.;
குமாரபாளையத்தில் மழைநீர் வடிகால் அமைக்க நமக்கு நாமே திட்டத்தில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணனிடம், குள்ளங்காடு நாகராஜ் நிதி உதவி வழங்கினார்.
குமாரபாளையத்தில் மழைநீர் வடிகால் அமைக்க நமக்கு நாமே திட்டத்தில் தனியார் நிதி உதவி வழங்கினார்.
குமாரபாளையம் 15 வது வார்டு குள்ளங்காடு கலைவாணி தெருவில் சிறுபாலம் அமைத்து மழை நீர் வடிகால் அமைக்க நமக்கு நாமே திட்டத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டது. திட்டத்திற்கு பொதுமக்களின் பங்களிப்பு தொகையான ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கான காசோலையை அப்பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி டெக்ஸ்டைல்ஸ் நாகராஜ் என்பவர் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் முன்னிலையில், நகராட்சி தலைவர் விஜய்கண்ணிடம் வழங்கினார். நகர மன்ற உறுப்பினர்கள் கோவிந்தராஜன், ஜேம்ஸ், அழகேசன், வேல்முருகன், திமுக நிர்வாகிகள் செந்தில்குமார், கந்தசாமி, விக்னேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
குமாரபாளையம் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் துவக்கப்பட்டு எனது குப்பை எனது பொறுப்பு, என்ற அடிப்படையில், நகரப் பகுதியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 33 வார்டுகளிலும், தினசரி வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து, உரக்கிடங்கு மூலம் உரங்கள் தயாரித்து விவசாயத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தூய்மை பணியாளர்கள் மூலம் அனைத்து வார்டுகளிலும் சாக்கடை சுத்தம் செய்தல், புல் பூண்டு அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி ஆணையாளர் சரவணன் தலைமையில் காவிரிக் கரையோரம் மரக்கன்றுகளை நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் நட்டார்.
பொது இடங்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளான ஆற்றங்கரை, கோம்பு பள்ள ஓடை ஆகியவற்றில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டக் கூடாது, எனவும், வீடுகள் தோறும் வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று தரம் பிரித்து வழங்க வேண்டும் எனவும், குமாரபாளையம் நகராட்சியை தூய்மையான நகராட்சியாக மாற்றுவதற்கு பொதுமக்கள் பெரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்கள். சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் ஜான் ராஜா, கவுன்சிலர் ராஜ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.