போலி லாட்டரி விற்ற மூவர் கைது

குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2024-10-25 07:30 GMT

போலி லாட்டரி விற்ற  மூவர் கைது

குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல், நடராஜ், எஸ்.எஸ்.ஐ.க்கள் ராம்குமார், குணசேகரன், மாதேஸ்வரன் பழனிச்சாமி உள்பட பலர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். வேதாந்தபுரம், கல்லங்காட்டுவலசு, ஆலாங்காட்டுவலசு உள்ளிட்ட இடங்களில் போலி லாட்டரி விற்பது உறுதியானது. நேரில் சென்ற போலீசார் முரளி, 24, பழனிசாமி, 60, சஞ்சீவிமூர்த்தி, 32, ஆகிய மூவரை கைது செய்து, அவர்களிடமிருந்து வெள்ளை பேப்பரில் எண்கள் எழுதிய 12 போலி லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News