தூர் வாரப்பட்ட மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால்

குமாரபாளையம் அருகே மேட்டூர் கிழக்குக் கரை வாய்க்கால் தூர் வாரப்பட்டது.;

Update: 2025-05-13 16:04 GMT

தூர் வாரப்பட்ட மேட்டூர்

கிழக்கு கரை வாய்க்கால்


குமாரபாளையம் அருகே மேட்டூர்

கிழக்குக் கரை வாய்க்கால் தூர் வாரப்பட்டது.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, குப்பாண்டபாளையம் ஊராட்சி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 5 ஆயிரத்திற்கும் மேலான ஏக்கர் விவசாய நிலங்கள், மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் நீரை நம்பி உள்ளது. வழக்கமாக ஜூலை மாத இறுதியில் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடுவார்கள். அதற்கு முன்பாக, வருகிற தண்ணீர் கடைமடை வரை எளிதாக செல்ல, வாய்க்கால் முழுதும் தூர் வாரப்பட வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வசம் கோரிக்கை விடுத்தனர். இதன்படி, தற்போது, குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை ஊராட்சி, உப்புக்குளம் பகுதியில் இருந்து, பொக்லின் மூலம், வாய்க்கால் தூர் வாறும் பணிகள் துவங்கியது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

படவிளக்கம் : 

குமாரபாளையம் அருகே மேட்டூர்

கிழக்குக் கரை வாய்க்கால் தூர் வாரப்பட்டது.

Similar News