தொடரும் ஆக்கிரமிப்புகள் கண்டு கொள்ளாத அதிகாரிகள்
குமாரபாளையம் அருகே தொடரும் ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்ளாத அதிகாரிகள் மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.;
தொடரும் ஆக்கிரமிப்புகள்
கண்டு கொள்ளாத அதிகாரிகள்
குமாரபாளையம் அருகே தொடரும் ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்ளாத அதிகாரிகள் மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
குமாரபாளையம், பள்ளிபாளையம் சாலை, சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலை, தீயணைப்பு நிலையம் எதிரில், நாளுக்கு நாள் பலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைத்து வருகின்றனர். பல கடைகள் உருவானால் இங்கு ஆக்கிரமிப்பு அகற்ற முடியாத நிலை ஏற்படும். ஆகவே, தொடக்க நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்படும் கடைகளை வரைமுறைப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர் ஆக்கிரமிப்பு செய்து வரும் நிலையில் கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
படவிளக்கம் :
குமாரபாளையம் அருகே தொடரும் ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்ளாத அதிகாரிகள் மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.