பத்ரகிரியார் தியான மண்டபத்தில் திருவிளக்கு வழிபாடு

குமாரபாளையம் பத்ரகிரியார் தியான மண்டபத்தில் திருவிளக்கு வழிபாடு நடந்தது;

Update: 2025-01-01 16:00 GMT

பத்ரகிரியார் தியான மண்டபத்தில் திருவிளக்கு வழிபாடு - குமாரபாளையம் பத்ரகிரியார் தியான மண்டபத்தில் திருவிளக்கு வழிபாடு நடந்தது.

குமாரபாளையம் காந்தி நகர் பத்ரகிரியார் தியான மண்டபத்தில், பத்ரகிரியார் சுவாமிகள் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, மண்டல பூஜைகள் 48 நாட்கள் நடந்தது. இதன் நிறைவு விழாவில், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது. பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு வழிபாடு, பக்தி பாடல்கள் பஜனை நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு ஊர்களிலிருந்து சுவாமியின் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

குமாரபாளையம் பத்ரகிரியார் தியான மண்டபத்தில் மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டி, திருவிளக்கு வழிபாடு நடந்தது.

Tags:    

Similar News