குமாரபாளையத்தில் தமிழ் ஆர்வலர்கள் கொண்டாடிய திருவள்ளுவர் நாள்

குமாரபாளையத்தில் திருவள்ளுவர் தமிழ் இயக்கம் சார்பில் திருவள்ளுவர் நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-01-15 11:15 GMT

குமாரபாளையத்தில் திருவள்ளுவர் தமிழ் இயக்கம் சார்பில் கொண்டாடிய திருவள்ளுவர் நாள் விழா.

குமாரபாளையத்தில் திருவள்ளுவர் தமிழ் இயக்கம் சார்பில், அமைப்பாளர் பங்கயம் தலைமையில் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்பட்டது.

சிற்பி குணசேகரனால் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவர் திருவுருவச்சிலைக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் ஆர்வலர்கள் சீனிவாசன், அண்ணாதுரை, விடியல் பிரகாஷ் உள்ளிட்டோர், விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள் ஒவ்வொருவரும் ஒரு திருக்குறள் சொல்லி மலரஞ்சலி செலுத்தினர்.

திருக்குறள் சம்பந்தமாக பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு திருக்குறள் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கு வந்த பொதுமக்கள் அனைவர்க்கும் முக கவசங்கள், கிருமிநாசினி மருந்து வழங்கப்பட்டன.

Tags:    

Similar News