வெப்படையில் தனியார் பஸ் சிறைபிடிப்பால் பரபரப்பு
kumarapalayam news- நாமக்கல் மாவட்டம் வெப்படை பேருந்து நிலையத்தில் ஈரோட்டில் இருந்து சேலம் சென்ற தனியார் பேருந்து பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.;

kumarapalayam news- வெப்படையில் தனியார் பஸ் சிறைபிடிப்பு
kumarapalayam news- நாமக்கல் மாவட்டம் வெப்படை பேருந்து நிலையத்தில், ஈரோட்டில் இருந்து சேலம் சென்ற தனியார் பேருந்து பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வெப்படை பேருந்து நிறுத்தம். முக்கிய பகுதியாகும் சுமார் 60க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்குவதால் இப்பகுதியில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக அருகில் உள்ள ஈரோடிற்கு சென்று வருவது வழக்கம்.
தற்பொழுது தீபாவளி நெருங்கி வரும் சூழ்நிலையில் தங்களுக்கு தேவையான உடைகள் எடுப்பதற்காக சென்று வரும் வெப்படை பகுதி மக்களுக்கு ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி செல்லும் தனியார் பேருந்துகள் ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து வெப்படைக்கு வரும் பயணிகளை பேருந்துகளில் ஏற்றுவதில்லை இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்
இந்நிலையில் இன்று மாலை சில பயணிகள் ஈரோட்டுப் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து மூலம் வெப்படைக்கு வர முயன்ற பொழுது தனியார் பேருந்து நடத்துனர் பயணிகளை ஏற்ற மறுத்து விட்டார் இதனால் அங்கிருந்து பயணிகள் வெப்படை பகுதியில் உள்ள தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்தை வெப்படை பேருந்து நிலையத்தில் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
இந்தப் பகுதியில் அடிக்கடி பேருந்துகள் சிறை பிடித்து போராட்டம் நடத்துவது வாடிக்கையாக்கிவிட்ட சூழ்நிலையில் போலீசார் சிறைபிடித்த பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் அமைதி கூட்டம் நடத்தி தீர்வு காணலாம் என பொது மக்களிடம் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்
மேலும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இடம் இனி வெப்படை பேருந்து நிறுத்தத்தில் கண்டிப்பாக வாகனங்களை நிறுத்திச் செல்ல வேண்டும் வெப்படை பேருந்து நிறுத்தத்தில் இருந்து சேலத்திற்கு வரும் பயணிகளை மட்டும் ஏற்றும் நீங்கள் ஏன் ஈரோட்டுப் பேருந்து நிலையத்திலிருந்து வெப்படைக்கு பயணிகளை ஏற்றுவது இல்லை என போலீசார் கேட்டதற்கு பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் பதில் கூற முடியாமல் தவித்தனர் இதன்பின் போலீசாரின் சமரசத்தை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் தனியார் பேருந்து சிறை பிடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.