தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

குமாரபாளையத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2024-10-24 11:15 GMT

குமாரபாளையத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.

தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில், கால பைரவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், கள்ளிப்பாளையம் சிவன் கோவில், கோட்டைமேடு சிவன் கோவில், உள்ளிட்ட பல சிவன் கோவில்களில் காலபைரவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

சிவனின் மகனாக கருதப்படும் பைரவர் 8 வடிவங்களில் அருள் செய்கிறார். இவர்களை அஷ்ட பைரவர்கள் என அழைக்கிறோம். காசி நகரின் காவல் தெய்வமாக விளங்குபவர் இவர் தான். கால பைரவரின் அனுமதி இருந்தால் மட்டுமே காசி நகருக்கு சென்று விஸ்வநாதரை நம்மால் தரிசிக்க முடியும் என சொல்வார்கள். காசி நகரத்தை எட்டு திசைகளிலும் இருந்து காவல் காப்பவர் இவர் தான்.

அனைத்து சிவன் கோவில்களிலும் கால பைரவர் அல்லது பைரவர் சன்னதி நிச்சயம் அமைந்திருக்கும். வடகிழக்கு திசையில், ஆடை இல்லாமல், நின்ற கோலத்தில் காட்சி தருவார். நாகத்தை பூணூலாகவும், பிறையை தலையிலும் அணிந்து காட்சி தருவார். சிவாலயங்களில் காவல் தெய்வமாக விளங்குபவரக் பைரவர். பைரவர் என்ற சொல்லுக்கு பயத்தை போக்குபவர் என்று பொருள். மனதார நினைத்து வழிபடுபவர்களுக்கு உடனடியாக அருளை தரக் கூடியவர். இவரின் அருள் இருந்தால் அஷ்டமா சித்திகமும் கைகூடும்.

காலத்தின் கடவுள் என சொல்லப்படுவதால் ஒருவரின் தலைவிதியை மாற்றும் சக்தி இவருக்கு உண்டு. நவ கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்த வல்லவர் என்பதால் இவரை வழிபட்டால் நவகிரக தோஷங்கள், நவகிரகங்களால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து மீண்டு வர முடியும். இவர் சனீஸ்வரரின் குரு ஆவார்.

Tags:    

Similar News