குமாரபாளையத்தில் சிமெண்ட் கடையில் பணம் திருட்டு
குமாரபாளையத்தில் உள்ள சிமெண்ட் கடையில் பணம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
குமாரபாளையம் காவேரி நகரில் சிமெண்ட் கடை வைத்து நடத்தி வருபவர் பாலசுப்பிரமணி, 36. இதில் மேலாளராக பணியாற்றி வருபவர் வேலு, 30. இவர் நேற்றுமுன்தினம் இரவு, 09:00 மணியளவில் கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை 06:00 மணிக்கு, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் மேலாளர் வேலுவிற்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, அவர் நேரில் வந்து பார்த்தார். டேபிள் டிராயரில் வைத்திருத்த பணம் 40 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து, குமாரபாளையம் போலீசில் புகார் தர, போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.