தேடப்படும் குற்றவாளிகளாக இருவரை அறிவித்த நீதிமன்றம்

குமாரபாளையம் வழக்கு சம்பந்தமாக தேடப்படும் குற்றவாளிகளாக இருவரை நீதிமன்றம் அறிவித்தது.;

Update: 2025-04-09 10:30 GMT

தேடப்படும் குற்றவாளிகளாக

இருவரை அறிவித்த நீதிமன்றம்


குமாரபாளையம் வழக்கு சம்பந்தமாக தேடப்படும் குற்றவாளிகளாக இருவரை நீதிமன்றம் அறிவித்தது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது:

குமாரபாளையம் பல்வேறு குற்ற வழக்குகள் சம்பந்தமாக, இருவரை குமாரபாளையம் போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து திருச்செங்கோடு, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், 2, விசாரித்து, அரசு மேல்நிலைப்பள்ளி சாலையை சேர்ந்த பாவா(எ)ராஜா(எ)கோவிந்தராஜ், சேலம் அம்மாபேட்டை, ராஜகணபதி வீதியை சேர்ந்த சுரட்டையன் (எ) சிவா ஆகிய இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்தது. இவர்கள் இருவரும் ஜூன், 3ல், திருச்செங்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வேண்டும், என உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News