குமாரபாளையத்தில் பல மாதங்களுக்குப்பின் திரையரங்குகள் திறப்பு

குமாரபாளையத்தில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.;

Update: 2021-09-03 17:15 GMT
குமாரபாளையத்தில் பல மாதங்களுக்குப்பின் திரையரங்குகள் திறப்பு

பல மாதங்களுக்குப்பின் திறக்கப்பட்டுள்ள ஆர்.ஏ.எஸ். திரையரங்கு.

  • whatsapp icon

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல மாதங்களாக சினிமா தியேட்டர்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசின் சார்பில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சினிமா தியேட்டர்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், உள்ளிட்ட பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்று சினிமா தியேட்டர்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி குமாரபாளையம் சினிமா தியேட்டர்கள் செயல்பட துவங்கின. பல மாதங்களுக்கு பின் எம்.ஜி.ஆர். நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தின் போஸ்டர்கள் நகரில் முக்கியமான இடங்களில் ஒட்டப்பட்டிருந்தது.

இதனை எம்.ஜி.ஆர்.ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். ஆர்.ஏ.எஸ். சினிமா தியேட்டர் முன்பு எம்.ஜி.ஆரின் ப்ளெக்ஸ் பேனர் கட்டப்பட்டது. நேற்றைய செய்தித்தாள் ஒன்றில் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்பட விளம்பரமும் முதல் பக்கத்தில் பிரசுரம் ஆகியிருந்தது. பொதுமக்கள் ஆர்வத்துடன் உலகம் சுற்றும் வாலிபன் படத்தினை கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News