கணவனை கண்டுபிடித்துத்தர வேண்டி மனைவி போலீசில் புகார்
கணவனை கண்டுபிடித்துத்தர வேண்டி மனைவி குமாரபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார்.
குமாரபாளையம் காந்திநகர், சடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுமதி, 30, கூலி. இவரது கணவர் பூபதிராஜா, 38. கூலி. இருவருக்கும் திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு கவுதம், 14, என்ற மகனும் அபிநயா, 13, மகளும் உள்ளனர்.
இந்நிலையில் பிப்.1ம் நாள் சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த வித்யா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கணவனை கண்டுபிடித்து தருமாறு சுமதி குமாரபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.