குமாரபாளையத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

குமாரபாளையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் காரணமாக சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

Update: 2022-01-16 13:30 GMT

குமாரபாளையத்தில் ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்.

தமிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிறு முழு நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்தினர் ஒலி பெருக்கி மூலம் ஒரு வார காலமாக நகரின் அனைத்து பகுதியிலும் பிரச்சாரம் செய்தனர்.

நகராட்சி அலுவலர்களும் வணிக நிறுவனத்தார் உள்ளிட்ட அனைவரிடமும் ஆதரவு தர வேண்டி நேரில் அறிவுறித்தினர். சேலம் சாலை, ஆனங்கூர் சாலை, பள்ளிபாளையம் சாலை, இடைப்பாடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து வணிக நிறுவனங்கள், தினசரி காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் கடைகள் யாவும் அடைக்கப்பட்டு இருந்தது.

புறவழிச்சாலையிலும் 90 சதவீத வாகன போக்குவரத்து இல்லாமல் இருந்தது. அங்கு வந்த பொதுமக்களை போக்குவரத்து போலீசார் விசாரணை செய்து அனுப்பி வைத்தனர். நகர பகுதியிலும், முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளிலும் போலீசார் வெளியில் நடமாடும் பொதுமக்களை எச்சரித்து வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

Similar News