மனிதக்கழிவுகளை, மனிதர்களே கைகளால் அகற்றும் பணி! நகராட்சி ஆணையர் அறிக்கை
குமாரபாளையத்தில் நகராட்சி ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நகராட்சி ஆணையர் அறிக்கை
குமாரபாளையத்தில் நகராட்சி ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
பல்ராம்சிங் என்பவரால் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் ஆணைகளின் படி, மனிதக்கழிவுகளை, மனிதர்களே கைகளால் அகற்றும் பணியினை மேற்கொள்ளும் நபர்களை கணக்கெடுப்பு செய்யப்பட்டதில், எங்கும் கண்டறியப்படவில்லை என தெரியவருகிறது. ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் 15நாட்களுக்கும் நகராட்சி ஆணையருக்கு எழுத்து மூலமாக தெரிவித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.