மீண்டும் வேலை கேட்டு சாலையில் படுத்து ரகளை செய்த தூய்மை பணியாளர்

குமாரபாளையம் நகராட்சி தற்காலிக முன்னாள் தூய்மை பணியாளர் குடி போதையில் சாலையில் படுத்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தினார்.

Update: 2023-07-14 17:00 GMT

குமாரபாளையம் நகராட்சி தற்காலிக முன்னாள் தூய்மை பணியாளர் குடி போதையில் சாலையில் படுத்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தினார்

குமாரபாளையம் நகராட்சி தற்காலிக முன்னாள் தூய்மை பணியாளர் குடி போதையில் சாலையில் படுத்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தினார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர் மற்றும் வாகன ஓட்டுனராக பணிபுரிந்தவர் மாதேஸ், 48. இவர் இரண்டு நாட்கள் முன்பு குடிபோதையில் பணிக்கு வந்ததால் தனியார் நிர்வாகத்தினர் குடிபோதையில் பணிக்கு வரக்கூடாது என எச்சரிக்கை செய்து பணிநீக்கம் செய்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த தூய்மை பணியாளர் மாதேஷ், எடப்பாடி சாலையில் நேற்று மாலை 05:00 மணியளவில் மதுபோதையில் பள்ளி வாகனம் முன்பு படுத்துக்கொண்டு நகராட்சி தற்காலிக பணிகளில் தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என சத்தமிட்டபடி, இடைப்பாடி சாலையில் படுத்துக்கொண்டார்.

இதனால் போக்குவரத்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பள்ளி வாகனங்கள் முன்பு குடி போதையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவரை குண்டு கட்டாக தூக்கி ஓரமாக அமர வைத்து காவல்துறையில் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரகளையில் ஈடுபட்ட டிரைவர் மாதேஸை அழைத்து சென்றனர்.

குடித்துவிட்டு பணிக்கு வருவதே தவறு. அதற்கு போராடுவதற்கு குடித்துவிட்டு ரகளை செய்தால் யார்தான் வேலை தருவார்கள்? அவரது மனைவி, குழந்தைகளை அவர் சிறிதும் சிந்தித்துப்பார்க்காமல் குடித்துவிட்டு பணிக்கு சென்றுள்ளார். குடும்ப பொறுப்பு இல்லாத இவரைப்போன்றவர்கள் இருப்பதால்தான் பல குடும்பங்கள் சீரழிந்து போகின்றன. இந்த சமூகம் அந்த குடும்பத்தையும் அவதூறு செய்கிறது. இவர்கள் திருந்தினால் மட்டுமே அவர்கள் குடும்பம் நிம்மதியாக வாழ முடியும்.

Tags:    

Similar News