குமாரபாளையத்தில் வீட்டிற்கு வரும் குடிநீர் இனி குறையும்

குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு, பொதுமக்கள் அதிர்ச்சி.;

Update: 2021-04-27 12:10 GMT

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி சார்பில் முக்கிய செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபுவிடம் கேட்ட போது,

காவிரி ஆற்றில் நாளுக்கு நாள் நீர் வரத்து மிகவும் குறைந்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் வரையிலும் பொதுமக்களுக்கு தினமும் வழங்கப்பட்டு வந்த குடிநீரின் அளவை குறைக்கும் வகையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் காவிரி ஆற்றுநீர் மக்களுக்கு வழங்கப்படும் என்றார். மேலும் பொதுமக்கள் கோடை காலத்தை ஒட்டி குடிநீரை சிக்கனமாக  பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், இது குறித்து அறிவிப்பு பொதுமக்களிடையே முறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த அறிவிப்பால் குமராபாளையம் நகர பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News