தாலுக்கா அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்!
குமாரபாளையத்தில் தாலுக்கா அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.;
தாலுக்கா அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
குமாரபாளையத்தில் தாலுக்கா அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மூன்றாம் கட்ட பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதி திருத்த அரசாணையை உடன் வெளியிட வேண்டும், மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை களைந்து ஒருங்கிணைந்த பணி முதுநிலை தொடர்பாக தெளிவுரைகள் வெளியிட வேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்ச வரம்பினை, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை 25 சதவீதமாக உயர்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதில் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் செந்தில்குமார், குமார், தேர்தல் துணை வட்டாச்சியர் செந்தில்குமார், பள்ளிபாளையம் ஆர்.ஐ. ஜெகதீஷ்வரன், குமாரபாளையம் ஆர்.ஐ. புவனேஸ்வரி, ஓட்டுனர் அண்ணாதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.