கொரோனா நிவாரண நிதி டோக்கனை பெற அலைமோதிய பொதுமக்கள்
டோக்கனை வழங்கி சென்றனர்;
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் நியாய விலைக் கடைகள் 5-ஒன்றாக ஒரே பகுதியில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு கொரோனா கால சிறப்பு நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கபடுமென. தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் முன் தவணை தொகையாக 2 ஆயிரம் ரூபாயை இந்த வாரத்தில் அனைத்து ரேஷன் அட்டை பயனாளிகளுக்கும் வழங்கபடவுள்ள நிலையில் ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பயனாளிகள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு அதன் பிறகு அனைவருக்கும் பணம் வழங்கப்படும் என தெரிவிக்கபட்ட நிலையில் பள்ளிப்பாளையம் ஆவாரங்காடு பகுதியில் அனைத்து ரேஷன் கடை அட்டை பயனாளிகளுக்கும் டோக்கன் தரப்படுவதாக தகவல் வரவே அனைத்து பகுதி பொது மக்களும் ஒரே நேரத்தில் திரண்டதால் கடும் கூட்ட நெரிசலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
அதன்பிறகு ரேஷன் கடை ஊழியர்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தி டோக்கனை வழங்கி சென்றனர்