பள்ளிபாளையம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து மூதாட்டி உள்ளிட்ட 3 ஆடுகள் சாவு
பள்ளிபாளையம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மூதாட்டி உள்ளிட்ட 3 ஆடுகள், ஒரு நாய் பலியானது.;
பள்ளிபாளையம் அருகே பூமடைக்காடு, வெள்ளைப்பாறை பகுதியில் வசிப்பவர் ராஜம்மாள், 70. இவர் ஆடுகள் மேய்த்து வாழ்ந்து வருகிறார். நேற்று மாலை மழை பெய்ததால் ஆடுகள் நனையாமல் இருக்க, இவரது வீட்டின் அருகே உள்ள கூரை கொட்டகையில் கட்டி வைக்க வேண்டி, ஆடுகளை இழுத்துக்கொண்டு செல்ல முயற்சித்தார்.
இவருடன் இவரது வளர்ப்பு நாயும் கூட வந்தது. அப்போது காற்றின் வேகத்தில் அருகே இருந்த மின் கம்பத்தில் இருந்து உயர் அழுத்த மின் கம்பி ஒன்று அறுந்து கீழே விழுந்து கிடந்துள்ளது. அதில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக ராஜம்மாள் அந்த அறுந்து கிடந்த மின் கம்பி மீது கால் வைக்க மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலியானார்.
இவருடன் வந்த மூன்று ஆடுகள் மற்றும் வளர்ப்பு நாய் ஆகியவையும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன. இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.