சாலையில் தவித்த 7 வயது சிறுமி: பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்..!
குமாரபாளையத்தில் சாலையில் தவித்த 7 வயது சிறுமியை, ஒரு மணி நேரத்தில் பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
சாலையில் தவித்த 7 வயது சிறுமியை ஒரு மணி நேரத்தில் போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குமாரபாளையத்தில் சாலையில் தவித்த 7 வயது சிறுமியை, ஒரு மணி நேரத்தில் பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
குமாரபாளையம் கௌரி தியேட்டர் பகுதியில் நேற்று இரவு 08:00 மணியளவில் 7 வயது சிறுமி ஒருவர் சாலையில் அழுதபடி நடந்து வந்துள்ளார். அதை கண்ட வழிபோக்கர் ஒருவர் அந்த சிறுமியிடம் விபரம் கேட்க, அந்த சிறுமி எதுவும் பேசவில்லை. இதனை கண்ட அதே பகுதியில் துணிக்கடை வைத்திருக்கும் கணேசன் என்பவர் கேட்டும் பதில் இல்லை.
உடனே அந்த சிறுமியை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்தார். இன்ஸ்பெக்டர் தவமணி எவ்வவளவு கேட்டும் பலனில்லை. அந்த சிறுமி எதுவும் பேசவில்லை. உடனே போட்டோ எடுத்து அனைத்து வாட்ஸ்அப் குரூப்பில் போட்டார். 09:00 மணியளவில் இதனை கண்ட பெற்றோர் போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து நேரில் வந்தனர்.
இன்ஸ்பெக்டர் விசாரணையில், நாராயண நகரில் வசிக்கும் பெற்றோர் செந்தில்குமார், பிரித்தா என்பதும், 7 வயது சிறுமியின் பெயர் பிரித்திகா என்பது தெரியவந்தது. விளையாடப் போகும் விஷயம் சம்பந்தமாக தாயார் திட்டியதாக தெரிகிறது. இதனால் கோபித்துக் கொண்டு வெளியில் வந்து விட்டார். இன்ஸ்பெக்டர் தவமணி எச்சரித்து, குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தார்.