அரசு மருத்துவமனை முன்பு படுத்திருந்த ஓட்டல் தொழிலாளி இறப்பு!

குமாரபாளையம் அரசு மருத்துவமனை முன்பு படுத்திருந்த ஓட்டல் தொழிலாளி இறந்தார்.;

Update: 2024-11-02 10:00 GMT

அரசு மருத்துவமனை முன்பு படுத்திருந்த ஓட்டல் தொழிலாளி இறப்பு

குமாரபாளையம் அரசு மருத்துவமனை முன்பு படுத்திருந்த ஓட்டல் தொழிலாளி இறந்தார்.

குமாரபாளையம் காந்தி நகர் பகுதியில் வசிப்பவர் குமார், 35. ஓட்டல் தொழிலாளி. இவருக்கு நுரையீரல் பாதிப்பு சம்பந்தமாக பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ஓய்வில் இருந்து வந்த நிலையில், நேற்றுமுன்தினம் மாலை 05:00 மணியளவில் காவேரி ஆற்றுக்கு தன் தந்தை செல்வமணியுடன் சென்றார். அப்போது வலது காலில் கண்ணாடி ஏறி ரத்தம் வெளியானது. இதனால் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றனர். மருத்துவமனை முன்பு குமார் தங்கி கொண்டார். தந்தை செல்வமணி பல்லவா மில் விடுதி வார்டன் வேலைக்கு சென்று விட்டார். மறுநாள் மொபைல் போனில் அனாதை சடலம் என தன் மகனின் போட்டோ பார்த்து அதிர்ச்சியடைந்து நேரில் வந்த செல்வமணி, சவக்கிடங்கில் மகனின் சடலத்தை பார்த்து உறுதி செய்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசில் செல்வமணி புகார் கொடுத்தார். குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவுஸ் செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News