சாரணர் மாணவர்களை வழியனுப்பிய தலைமையாசிரியர்

குமாரபாளையத்தில் சாரணர் மாணவர்களை தலைமையாசிரியர் வழியனுப்பி வைத்தார்

Update: 2022-09-10 13:15 GMT

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஸ்கவுட் எனப்படும் 23 சாரணர் மாணவர்கள் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.கல்லூரியில் நடைபெறும் ராஜ புரஸ்கார் ஆயத்த பயிற்சி முகாமிற்கு சென்றனர்.

குமாரபாளையத்தில் சாரணர் மாணவர்களை தலைமையாசிரியர் வழியனுப்பி வைத்தார்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஸ்கவுட் எனப்படும் 23 சாரணர் மாணவர்கள் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.கல்லூரியில் நடைபெறும் ராஜ புரஸ்கார் ஆயத்த பயிற்சி முகாமிற்கு சென்றனர். இவர்களை வழியனுப்பும் விழா தலைமையாசிரியர் ஆடலரசு தலைமையில் நடந்தது. இரண்டு நாட்கள் நடைபெறும் முகாமில் சரண இயக்க வரலாறு மற்றும் பல்வேறு கலை நுணுக்கங்கள் பற்றிய பயிற்சிகள் பெறுவதன் மூலம் மாணவர்கள் ராஜபுரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சிக்கு செல்லும் மாணவர்களுக்கு பேருந்து வசதியை எஸ்.எஸ்.எம். மெட்ரிக் பள்ளி தாளாளர் ரவீந்திரன் ஏற்பாடு செய்து கொடுத்தார். மாணவர்களை என்.சி.சி.அலுவலர் அந்தோணிசாமி, விடியல் பிரகாஷ், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட பலர் வழியனுப்பி வைத்தனர்.



Tags:    

Similar News