மாணவர்கள் நலன் கருதி சொந்த செலவில் வேகத்தடை அமைத்த தலைமை ஆசிரியை

குமாரபாளையம் அருகே ஒப்பந்ததாரர் மறுப்பால் அரசு பள்ளி முன் வேகத்தடை அமைக்கும் பணியில் தலைமை ஆசிரியை ஈடுபட்டார்.

Update: 2022-04-08 14:00 GMT

பள்ளி முன் அமைக்கப்பட்ட வேகத்தடை.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வேமன்காட்டுவலசு பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு  இதன் முன்பு வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது. புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்ற போது, அந்த வேகத்தடை அகற்றப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்பந்ததாரரிடம், பள்ளி முன் வேகத்தடை அவசியம் வேண்டும். இதற்கு முன்பு இருந்தது போல் அமைத்து கொடுங்கள் என்று கேட்க, அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, தலைமை ஆசிரியை தன் சொந்த செலவிலும், பொதுமக்கள் பங்களிப்புடனும் வேகத்தடை அமைத்து உள்ளார்.

Tags:    

Similar News