மின்சாரம் தாக்கிய குரங்கை மீட்ட வனத்துறையினர்
குமாரபாளையத்தில் மின்சாரம் தாக்கிய குரங்கை வனத்துறையினர் மீட்டனர்.;
மின்சாரம் தாக்கிய குரங்கை மீட்ட வனத்துறையினர்
குமாரபாளையத்தில் மின்சாரம் தாக்கிய குரங்கை வனத்துறையினர் மீட்டனர்.
குமாரபாளையம் கலைமகள் வீதியில் நேற்று காலை 09:00 மணியளவில் வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே உள்ள மின்மாற்றியில் வயதான குரங்கு ஒன்று, மின்சாரம் தாக்கி கீழே விழுந்து, நடக்க முடியாத நிலையில் இருந்துள்ளது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் மகளிரணி அமைப்பாளர் சித்ரா,மற்றும் அப்பகுதியினர் நகராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். நாமக்கல்லில் இருந்து நேற்று மாலை 02:30 மணியளவில் வனத்துறையினர் வந்தனர். கால்நடை மருத்துவர் செந்தில்குமார் நேரில் வந்து, முதலுதவி சிகிச்சை செய்தார். இதன்பின் வனப் பணியாளர்கள் குழுவினர் குரங்கை பிடித்து சென்றனர். அந்த குரங்கு கொல்லிமலை வனப்பகுதியில் விடப்பட்டதாக வனத்துறையினர் கூறினார்கள். குரங்கு சற்று வயதான நிலையில் இருந்ததாலும், மின்சாரம் தாக்கி சோர்வுடன் இருந்ததாலும், இந்த குரங்கால் யாருக்கும் எந்த வித தொந்தரவும் ஏற்படவில்லை.