கிணற்றில் விழுந்த நாயை மீட்ட தீயணைப்புத் துறையினர்

குமாரபாளையத்தில் கிணற்றில் விழுந்த நாயை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

Update: 2022-08-22 16:30 GMT

பைல் படம்

குமாரபாளையத்தில் கிணற்றில் விழுந்த நாயை தீயணைப்புத்துறையினர்  உயிருடன் மீட்டனர்.

குமாரபாளையம் கோட்டைமேடு பகுதியில் பழனிசாமி என்பவருக்கு சொந்தமான கிணறு உள்ளது. அப்பகுதியில் உள்ள சில தெரு நாய்கள் நேற்று இரவு 9:00 மணியளவில் சண்டை போட்டவாறு வந்ததில், ஒரு தெரு நாய் அந்த கிணற்றில் விழுந்தது. இது குறித்து குமாரபாளையம் தீயணைப்பு படையினருக்கு அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற மீட்பு படையினர் கிணற்றிலிருந்து நாயை பத்திரமாக மீட்டனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News