குமாரபாளையம் அருகே சாமி கும்பிடும் போது மயங்கி விழுந்த முதியவர் சாவு

குமாரபாளையம் அருகே சுவாமி கும்பிடும் போது மயங்கி விழுந்த முதியவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.;

Update: 2022-09-04 10:15 GMT

குமாரபாளையம் காவல் நிலையம் (பைல் படம்).

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் ஆயிகவுண்டம்பாளையம் பகுதியில் வசிப்பவர் பெருமாள்,(வயது70.) கூலித்தொழிலாளி. செப்.1ல் அதே பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு பூஜை செய்தனர். அதில் இவர் பங்கேற்று சுவாமியை வணங்கினார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார். இவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வீட்டிற்கு வந்தார். செப். 3 மாலை 02:00 மணியளவில் இவர் இறந்தார். ரத்த அழுத்தம் காரணமாக ஏற்கனவே மாத்திரை சாப்பிட்டு வந்தவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

Tags:    

Similar News