அரசு பள்ளியில் குறைகள் கேட்டறிந்த சேர்மன்

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நகராட்சி சேர்மன் குறைகள் கேட்டறிந்தார்

Update: 2022-08-26 16:30 GMT

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆடலரசுவிடம் பள்ளிக்கு தேவையான அத்தியாவசியமான தேவைகள் குறித்து நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் கேட்டறிந்தார்.

குமாரபாளையம் அரசு பள்ளியில் நகராட்சி சேர்மன் குறைகள் கேட்டறிந்தார்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நகராட்சி தூய்மை பணியாளர்களால் நடைபெற்று வரும் தூய்மை பணிகளை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார். தலைமை ஆசிரியர் ஆடலரசு சால்வை அணிவித்து வரவேற்றார். தலைமை ஆசிரியரிடம் பள்ளிக்கு தேவையான அத்தியாவசியமான தேவைகள் குறித்து கேட்டறிந்தார். என்.சி.சி. அலுவலகம் சென்று மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், நாட்டு நலப்பணி திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். அங்கு சமைக்கப்படும் சத்துணவு கூடத்திற்கு சென்று உணவின் தரத்தை ருசி பார்த்தார். கவுன்சிலர்கள் ஜேம்ஸ், வேல்முருகன், ராஜ், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், சரவணன், ஜுல்பிகர் அலி, ஹரிபாலாஜி, விக்னேஷ், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ராஜேந்திரன், என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி ஆசிரியர் கார்த்தி, உள்பட பலர் பங்கேற்றனர்.



Tags:    

Similar News