வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய அரசு கூடுதல் தலைமை செயலர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு கூடுதல் தலைமை செயலர் ஆறுதல் கூறி குறைகளை கேட்டறிந்தார்.;

Update: 2022-08-06 13:30 GMT

குமாரபாளையம் வெள்ள பாதிப்பு மக்களுக்கு அரசு கூடுதல் தலைமை செயலர் பிரபாகரன் ஆறுதல் கூறினார்.

காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல அரசு கூடுதல் தலைமை செயலர் பிரபாகரன் குமாரபாளையம் வந்தார். காவிரி கரையோர பகுதிகளை ஆய்வு செய்து, பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, குறைகள் கேட்டறிந்தார்.

பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், மேட்டூரில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் இரு கரைகளை தொட்டவாறு சென்று கொண்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 200க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறார்கள். மாற்று இடம் கேட்டுள்ளார்கள். இவர்களுக்கு தனித்தனி வீடு கொடுக்க இடம் இருப்பது சாத்தியம் இல்லை என்பதால், அடுக்குமாடு குடியிருப்பு வழங்க மாவட்ட கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இவருடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், டி.ஆர்.ஒ. மல்லிகா, ஆர்.டி.ஒ. இளவரசி, தாசில்தார் தமிழரசி, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஓ.க்கள் முருகன், தியாகராஜன், செந்தில்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News