குமாரபாளையத்தில் மது குடிக்க அனுமதித்ததாக 3 பேர் கைது
குமாரபாளையத்தில் மது குடிக்க அனுமதித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையம் கோட்டைமேடு, வட்டமலை பகுதியில் மது குடிக்க அனுமதிப்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேரில் சென்ற போலீசார் கோட்டைமேடு பகுதியில் முருகன்(வயது 42,) கிருஷ்ணன்,( 35,) வட்டமலை பகுதியை சேர்ந்த இளங்கோ,( 46,) ஆகிய மூவரை கைது செய்தனர்.