தாலுக்கா வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
குமாரபாளையம் தாலுக்கா வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது;
குமாரபாளையம் தாலுக்கா வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
குமாரபாளையம் தாலுக்கா வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். நேற்று புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் புதிய தலைவராக சரவணராஜன், செயலராக நடராஜன், பொருளராக நாகப்பன், துணை தலைவராக நந்தகுமார், துணை செயலராக ஐயப்பன், செயற்குழு தலைவராக லோகநாதன், செயற்குழு உறுப்பினர்களாக கார்த்தி, முருகேசன், ரமேஸ்,குணசேகரன், அனிதா, நூலகராக கருணாநிதி ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு முன்னாள் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.