தளிர்விடும் பாரதம் சார்பில் முப்பெரும் விழா
குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.;
தளிர்விடும் பாரதம் சார்பில்
முப்பெரும் விழா
குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சார்பில்
முப்பெரும் விழா நடந்தது.
குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சார்பில் 13 ஆம் ஆண்டு துவக்க விழா, இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா, சமூக சேவகர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா சின்னப்பநாயக்கன்பாளையம் நகராட்சி துவக்க பள்ளியில் நடந்தது. ஆலோசகர் லட்சுமணன் தலைமை வகித்தார். பொருளாளர் வரதராஜன் வரவேற்றார்.
குமாரபாளையம் எஸ்.ஐ. தங்க வடிவேல் ஜே.கே.கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் நளினி மற்றும் அசோக் கிருஷ்ணா மருத்துவமனை டாக்டர் நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
சிறந்த சமூக சேவைக்காக சித்ராவுக்கு விடிவெள்ளி விருதும், பாசம் இல்லம் குமாருக்கு பாசத்தலைவன் விருதும், ஈரோடு மாவட்ட ரத்ததான ஒருங்கிணைப்பாளர் கவியரசுக்கு உயிர் காக்கும் உத்தமர் விருதும் வழங்கப்பட்டது.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தலைவர் சீனிவாசன், உறுப்பினர்கள் சரண்யா மற்றும் நிதர்சன் ஆகியோர் செய்திருந்தனர்.
படவிளக்கம் :
குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சார்பில்
முப்பெரும் விழா நடந்தது.