குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் 10ம் ஆண்டு விழா
குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் பொதுநல அமைப்பின் 10ம் ஆண்டு விழா நடைபெற்றது.;
தளிர்விடும் பாரதம் பொதுநல அமைப்பின் சார்பில் 10ம் ஆண்டு விழா, அமைப்பாளர் சீனிவாசன் தலைமையில் குமாரபாளையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், கலை மற்றும் அறிவியல் சம்பந்தமாக கல்லூரி முதல்வர் டாக்டர் விமல் நிஷாந்த், பொறியியல் படிப்பு குறித்து டாக்டர் பிரபு, பேராசிரியர் ஸ்ரீகாந்த், மருத்துவ படிப்பு குறித்து பார்மசி கல்லூரி முதல்வர் டாக்டர் மணிவண்ணன், சட்டப்படிப்பு குறித்து சீர்மிகு சட்டப்பள்ளி வழக்கறிஞர் பிரியதர்சினி பேசினார்கள்.
இதில், தன்னம்பிக்கை பயிற்சியாளர் சுந்தர், பழனிச்சாமி, தினேஸ், கவுன்சிலர்கள் ராஜு, புஷ்பா, லட்சுமணன், உள்பட பலர் பங்கேற்றனர். மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்று பயன்பெற்றனர்.