தளபதி லயன்ஸ் சங்கத்திற்கு காலாண்டு விருது!
குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்க நிர்வாகிகள் காலாண்டு விருதுகள் பெற்றனர்.;
தளபதி லயன்ஸ் சங்கத்திற்கு காலாண்டு விருது
குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்க நிர்வாகிகள் காலாண்டு விருதுகள் பெற்றனர்.
சிறப்பாக சேவை செய்த லயன்ஸ் சங்க நிர்வாகிகளுக்கு காலாண்டு விருதுகள் வழங்கும் விழா ஆளுநர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. லயன்ஸ் மாவட்ட அளவில் உள்ள 185 சங்கங்களில் 113 சங்கங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்க பட்டய தலைவர் ஜெகதீஷ், மாவட்ட பசிப்பிணி தலைவர் சண்முகசுந்தரம், முன்னாள் தலைவர் மாதேஸ்வரன், தலைவர் கதிர்வேல், செயலர் கோகுல்ராஜ், திட்டச் செயலாளர் சிவராமன், பொருளாளர் செல்வராஜ் உறுப்பினர் செயல் திட்ட தலைவர் சின்னச்சாமி பங்கேற்று விருதுகள் பெற்றனர். இவர்களுக்கு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். வரும் காலத்தில் செயல்படுத்தவுள்ள சேவை திட்டங்களை பற்றிய அறிக்கை சமர்பித்தனர்.