11ம் வகுப்பு தேர்ச்சி பெறாததால், தாய் திட்ட, வெளியேறிய மகன்

11ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மகனை குமாரபாளையத்தில் தாய் திட்டியதால் மகன் வீட்டை விட்டு வெளியேறினான்.;

Update: 2025-05-21 12:34 GMT

11ம் வகுப்பு தேர்ச்சி பெறாததால், தாய் திட்ட, வெளியேறிய மகன்


11ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மகனை குமாரபாளையத்தில் தாய் திட்டியதால் மகன் வீட்டை விட்டு வெளியேறினான்.

குமாரபாளையம் அபெக்ஸ் காலனியில் வசிப்பவர் ரம்யா, 30. டைலர். இவருக்கும், இவரது கணவருக்கும் திருமணமாகி 18 வருடங்கள் ஆனது. கருத்து வேறுபாடு காரணமாக 10 வருடமாக இருவரும் தனியாக வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பரதன், 16, துவாரிதா, 14, ஆகிய மகன், மகள் ஆகியோர் ரம்யா உடன் உள்ளனர். பரதன், மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவில், பரதன் தேர்ச்சி பெறவில்லை. இதனால், தாய் ரம்யா, வெளியூருக்கு விடுமுறைக்கு சென்று வந்த மகனை நேற்றுமுன்தினம் திட்டினார். இதனால் மனமுடைந்த பரதன் வீட்டை விட்டு வெளியேறினான். இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் கொடுக்க, போலீசார் காணாமல் போன பரதனை தேடி வருகின்றனர்.

Similar News