குமாரபாளையம் ஆதரவற்றோர் மையத்திற்கு டெக்ஸ் சிட்டி லயன்ஸ் சங்கம் லேப்டாப்

குமாரபாளையம் ஆதரவற்றோர் மையத்திற்கு டெக்ஸ் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் லேப் டாப் வழங்கப்பட்டது.;

Update: 2024-02-20 11:53 GMT

குமாரபாளையம் ஆதரவற்றோர் மையத்திற்கு டெக்ஸ் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் லேப் டாப் வழங்கப்பட்டது

குமாரபாளையம் ஆதரவற்றோர் மையத்திற்கு டெக்ஸ் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் லேப் டாப் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் டெக்ஸ்சிட்டி லயன்ஸ் கிளப் சார்பில், பாசம் ஆதரவற்றோர் மையத்திற்கு லேப்டாப் வழங்கும் விழா, சங்க தலைவர் தனபால் தலைமையில் நடந்தது. மையத்தில் உள்ள நபர்களின் பெயர், விலாசம் உள்ளிட்ட விபரங்கள் பதிவு செய்தல், மையத்தின் அரசு அனுமதி கடித நகல், மருத்துவ சிகிச்சை குறித்த விபரங்கள் பதிவு செய்தல், மையத்தின் முதியோர்களுக்கு உணவு வழங்க வரும் நபர்களின் விபரங்களை பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக, கணினி ஒன்று கேட்டு, விண்ணப்பித்திருந்தனர். இதனை பரிசீலித்து, லேட்டாப் கொடுக்க முடிவு செய்தனர். இதன்படி நேற்று லேப்டாப் வழங்கும் விழாவில், மையத்தின் நிறுவனர் குமார் வசம், லயன்ஸ் நிர்வாகிகள் வழங்கினர். லேப்டாப் பெற்றுக்கொண்ட குமார், லயன்ஸ் சங்க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

லயன்ஸ் கிளப் தோற்றுவித்த மெல்வின் ஜோன்ஸ் பிறந்தநாள் விழா ,குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் பட்டய தலைவர் ஜெகதீஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. குமாரபாளையம் அன்னை ஆதரவற்றோர் மையத்தில் உள்ள முதியவர்களுக்கு வேட்டி, சட்டை, சேலைகள் தலா இரண்டு செட் வழங்கியதுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக சமூக நல விரிவாக்க அலுவலர் ஜெயலலிதா பங்கேற்று முதியவர்களுக்கு வேட்டி, சட்டை, சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். நித்யபிரபா என்ற ஏழை மாணவிக்கு கல்வி உதவித்தொகையாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மாவட்ட பசிப்பிணி தலைவர் சண்முகசுந்தரம், சங்கத் தலைவர் மாதேஸ்வரன், சங்க செயலாளர் கதிர்வேல், பொருளாளர் செல்லவேல் முன்னாள் பொருளாளர் தர்மலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News