அம்மன் நகரில் தற்காலிக வடிகால் பாலம் அமைக்க கோரிக்கை..!

குமாரபாளையம் அம்மன் நகரில் தற்காலிக வடிகால் பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-21 16:15 GMT

குமாரபாளையம் அம்மன் நகரில் வடிகால் தற்காலிக பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் அம்மன் நகரில் தற்காலிக வடிகால் தற்காலிக பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் அம்மன் நகர் சாலை சுமார் 20 ஆண்டுகளாக, சிலரின் ஆக்கிரமிப்பால் புதிய தார் சாலை அமைக்க முடியாமல் இருந்து வந்தது.

அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர் தர்மராஜன் ஆகியோர் நகராட்சி தலைவரிடம், அம்மன் நகர் பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் அறிவுறுத்தலின் பேரில், நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையாவை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து, நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் அம்மன் நகர் பகுதிக்கு தார் சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து தரக்கோரி கேட்டுக்கொண்டார்.

அதன் அடிப்படையில் அம்மன் நகர் பகுதியில் மழை நீர் வடிகால் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிக்கு ரூபாய் ஒரு கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவு பிறப்பித்துள்ளார். பல ஆண்டு கோரிக்கையாக இருக்கும் அம்மன் நகர் பகுதிக்கு தார் சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்தது அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியும் வரவேற்பும் பெற்றுள்ளது.

வடிகால் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இது முழுமை பெற்றதும் சாலை அமைக்கும் பணி தொடங்கவுள்ளது. இந்த சாலையில் கழிவுநீர் செல்ல பெரிய பள்ளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பலரும் விழுந்து காயமடைய நேரிடுகிறது. சாலைப்பணிகள் துவங்கும் வரை இந்த வடிகால் பகுதியில் தற்காலிக பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்காலிக பாலம் அமைக்கப்பட்டால் தார்ச்சாலை போடும்வரை அப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் சிரமமா இல்லாமல் செல்வதற்கு ஏதுவாக அமையும். அதனால் நகராட்சி நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு தற்காலிக பாலம் அமைத்து மக்களின் சிரமங்களை தீர்த்து வைக்குமாறு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News