பவானி அருகே கோவில் நிலங்கள் ரோவர் கருவி மூலம் அளவீடு
பவானி அருகே, ஜம்பை பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், நவீன ரோவர் கருவி மூலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.;
பவானி அருகே ஜம்பை பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், சுற்றுவட்டார கிராமப்பகுதியில் 30 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதனை குத்தகைக்கு எடுத்தவர்கள் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர் வகைகளை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலங்களில் குத்தகைதாரர்கள் பாதை அமைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது.
கோவில் செயல் அலுவலர் அன்புதேவி, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரவணன், கோபி காளியம்மன் கோவில் செயல் அலுவலர் சுகுமார், பவானி ஆய்வாளர் நித்யா, அறநிலையத்துறை தாசில்தார் பழனிச்சாமி, வி.ஏ.ஒ. ஆனந்தன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
இதை தொடர்ந்து, எல்லையில் கற்கள் நடப்பட்டதோடு குத்தகை விதிகளுக்கு புறம்பாக பாதை அமைத்த குத்தகைதாரரின் உரிமம் ரத்து செய்யவும் உரிய அறிவிப்பு வழங்கப்பட்டது.