கோவில் பிரச்சினையில் போலீஸ் நிலையம் முன் குவிந்த பொது மக்களால் பரபரப்பு

குமாரபாளையம் அருகே கோவில் தகராறில் மற்றொரு தரப்பினரை கைது செய்ய வேண்டி போலீஸ் ஸ்டேஷன் முன்பு பொதுமக்கள் குவிந்தனர்.

Update: 2022-05-26 16:00 GMT
கோவில் பிரச்சினை பற்றி பேசுவதற்காக  வெப்படை போலீஸ் நிலையம் முன் மக்கள் குவிந்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கலியனூர் காளியம்மன் கோவில் திருவிழாவில் கம்பம் ஆடுவது சம்பந்தமாக, இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தாசில்தார் தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் ஒரு தரப்பினரை சேர்ந்த நபர் ஒருவரை, மற்றொரு தரப்பினரை சேர்ந்த சிலர் தகாத வார்த்தை பேசியதுடன், தாக்கியுள்ளனர். சில நாட்கள் முன்பு இரு தரப்பினரும் போலீஸ் ஸ்டேஷன் வந்த போது, வெப்படை போலீசார் இரு தரப்பை சேர்ந்த தலா ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்வதாக கூறினார்கள்.

ஆனால் ஒரு தரப்பினரின் சார்பில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொரு தரப்பினர் நபர் மீது கைது செய்வதாக கூறிய போலீசார், இரண்டு நாட்கள் ஆகியும் கைது செய்யாததால், வெப்படை போலீஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் குவிந்தனர். இரவு நேரத்தில் கைது செய்ய முடியாது என்றும், பகலில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி கூறியதால், அங்கிருந்து கலைந்து சென்றனர். மே. 27 காலை கைது செய்யாவிட்டால் வெப்படை நான்கு ரோடு பகுதியில் சாலை மறியல் செய்வோம் என எச்சரிக்கை பொதுமக்கள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News