பள்ளிபாளையம் : மாரியம்மன் கோவில் உண்டியல் மாயம் -மர்ம நபர்கள் கொள்ளை
பள்ளிபாளையம் மாரியம்மன் கோவில் உண்டியலை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.;
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே மாரியம்மன் கோவில் புகுந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை பெயர்த்துச் எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக நிகழும் இச் சம்பவத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கோட்டக்காடு பகுதியில் கும்பத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல கோவிலை திறக்கச் சென்ற பூசாரி கோவிலில் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சிடைந்தார். இதன் பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் பொதுமக்கள் காணிக்கை செலுத்துவதற்காக 3அடி உயரம் வைக்கப்பட்டிருந்த உண்டியலை மர்ம நபர்கள் அடியோடு பேர்த்தெடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக நிகழ்ந்துள்ள உண்டியல் உடைப்பு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இப்பகுதியில் இரவு நேர ரோந்து பணியை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.