சித்தோடு அருகே இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை

சித்தோடு அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.;

Update: 2021-08-18 15:45 GMT

பைல் படம்.

சித்தோடு அருகே நசியனூர், கதிரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி, 35. கட்டிட கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி, மகன், மகளுடன் வசித்து வருகிறார். இவரது மகள் நந்தினி18, நேற்றுமுன்தினம் மாலை 4 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு வேலுசாமி, சித்தோடு போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.
Tags:    

Similar News