அரசு மது பானத்தை அதிக விலைக்கு விற்ற மூவர் கைது
குமாரபாளையத்தில் அரசு மது பானத்தை அதிக விலைக்கு விற்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.;
அரசு மது பானத்தை அதிக விலைக்கு
விற்ற மூவர் கைது
குமாரபாளையத்தில் அரசு மது பானத்தை அதிக விலைக்கு விற்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையத்தில் அரசு மது பானத்தை அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். சேலம் சாலை துளிர் தாபா அருகில் அதிக விலைக்கு மது விற்பதாக தகவல் அறிந்து, அங்கு சென்ற போலீசார், அதிக விலைக்கு மது விற்றுக்கொண்டிருந்த மிதுன்குமார், 29, கோவிந்தசாமி, 51, சவுந்தரராஜன், 20, ஆகிய மூவரை கைது செய்து, அவர்களிடமிருந்து மது பாட்டில் 5 பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து கொண்டுள்ளனர்.