குமாரபாளையம் பள்ளிகளில் தாசில்தார் ஆய்வு
குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தாசில்தார் தமிழரசி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அடைக்கப்பட்ட பள்ளிகள் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. மாவட்ட கலெக்டர் உத்திரவுப்படி பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா? என்பது பற்றி குமாரபாளையம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தாசில்தார் இளவரசி, சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, விஏஒ., முருகன் உள்ளிட்ட பலர் ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர். அனைத்து பள்ளிகளிலும் நுழைவுப்பகுதியில் வெப்பமானி பரிசோதனை, முககவசம் அணிந்து வர அறிவுறுத்துதல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் ஆகியன பின்பற்றப்பட்டன.