குழந்தைகளின் ஆதார் விபரங்களை ஒப்படைக்க தாசில்தார் வேண்டுகோள்

குமாரபாளையம் தாலுக்காவில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் ஆதார் விபரங்களை ஒப்படைக்க தாசில்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-09-25 15:30 GMT

குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம்.

குமாரபாளையம் தாலுக்காவில் 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளின் ஆதார் விபரங்களை தாலுக்கா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைக்க தாசில்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தாசில்தார் தமிழரசி விடுத்துள்ள அறிக்கையில், குமாரபாளையம் தாலுகா அளவிலான பொதுமக்கள் தங்கள் ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளில் தங்களது 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் ஆதார் விபரங்களை பதிவு செய்திட வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நீண்ட நாட்களாக ஆதார் பதிவு நடைபெறாததால், அரசு அறிவித்த சில தளர்வுகளுக்கு பின் மீண்டும் தற்போது ஆதார் பதிவு செயல்பட்டு வருகிறது. தற்போது தங்கள் குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்தவர்கள், இதுவரை ரேசன் கார்டுகளில் தங்கள் குழந்தைகளின் ஆதார் விபரங்களை பதிவு செய்யாதவர்கள், உடனே குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் தங்கள் குழந்தைகளின் ஆதார் விபரங்களுடன் நேரில் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்.

மேலும் விபரங்களுக்கு குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலரையோ அல்லது  7200851942  என்ற தொலைபேசி எண்ணிேலா தொடர்புகொள்ளலாம் என அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News