தாசில்தார், இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு தெரிவித்த அதிமுகவினர்

குமாரபாளையம் அதிமுக சார்பில் தாசில்தார், இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;

Update: 2021-08-17 16:15 GMT

குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவியை அதிமுக நகர செயலர் நாகராஜன் தலைமையில் அக்கட்சியினர் போலீஸ் ஸ்டேஷனனில் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி சிறந்த புலனாய்வு செய்தமைக்காக முதல்வர் விருதினை நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் பெற்றார். இதற்கு குமாரபாளையம் அதிமுக நகர செயலர் நாகராஜன் தலைமையில் அக்கட்சியினர் போலீஸ் ஸ்டேஷனனில் இன்ஸ்பெக்டரை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் புதிதாக தாசில்தாராக பொறுப்பேற்றிருக்கும் தமிழரசியை தாலுக்கா அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News